|
Madurai Online | Home |
மீனாட்சி அம்மன் கோயில்குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரையின் பெருமைமிகு சிறப்பாகும். எனினும் 16வது மற்றும் 18வது நூற்றாண்டில் ஆட்சி புரிந்த நாயக்கன்மார்களுக்கே இக் கோயிலைக் கட்டிய பெருமை உரிதாகும். இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 12 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு உரிய மிகப் பெரிய சிறப்பாகும். எனினும் இவற்றின் வடக்கே அமைந்துள்ள கோபுரம் மட்டும் மிகவும் உயரமானதும், எளிதில் ஏறி கோபுரத்தைஅடையக்கூடியதுமான நிலையில் உள்ளது. ![]() திராவிட நாகரீகத்திற்கும், சிற்ப கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்கோயில். இந்நிலையில் இது போன்ற மிக சில கோயில்களே, இரட்டை கோபுர அமைப்புக் கொண்ட சிறப்புடையதாகும். இக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் ஆகும். எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். ![]()
|